இலங்கையின் கால்நடைத் துறை இலங்கை, மொத்தம் 65,610 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் ஏறக்குறைய 2 மிலியன் ஹெக்டெயர் அல்லது 30 வீதம் விவசாய நிலமாகும். அநேகமாக 75 வீத விவசாய நிலம் சிறுநில உடைமையாளர்களின் கீழும், ஏனையவை பெருந் தோட்டங்களின் கீழும் காணப்படுகின்றன. சிறுநில உடைமையாளர்கள் வசம் காணப்படும் மொத்த நிலங்கள் ஏறக்குறைய 1.8 மிலியன் ஆகவும் இதில் 90% ஆனவை 2 ஹெக்டெயர் பரப்பிலும் குறைந்தவையாகக் காணப்படுகின்றன. 70% சிறு நிலங்கள் பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேவேளை, எஞ்சியவற்றில் பயிர் செய்கையும், கால்நடை வளர்ப்பும் கலந்து நடைபெறுகின்றன. சில நிலங்கள் தனியாக கால்நடை வளர்ப்புக்கு மாத்திரம் பயன்படுத்தப்படுகி்ன்றன. மழை வீழச்சி மற்றும் சாய்வுக் கோணங்களின் அடிப்படையி்ல் இலங்கை மூன்று பிரதான விவசாய காலநிலை வலயங்களாகப் பிரிக்கப்படுகின்றது. அவையாவன, தாழ்நிலம், இடைநிலம் மற்றும் மலைநாடு ஆகும். தாழ்நிலமும், இடைநிலமும் ஈரவலயம், இடைநிலை ஈரவலயம் மற்றும் உயர்வலயம் என மேலும் மூன்று பிர்வுகளாக பிரிக்கப்படுகின்றன.
விவசாயத்துறையானது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16.8 வீதம் பஙகளிப்பு செலுத்துகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால்நடை உபதுறை 1.2% பஙகளிப்பு வழங்குகிறது.
நாட்டிற்குள், ஏறக்குறைய 1.5 மிலியன் பசுக்கள், 0.3 மிலியன் எருதுகள், 13 மிலியன் கோழிகள் மற்றும் 0.08 பன்றிகளும் செம்மறி ஆடு, வாத்து மற்றும் ஏனைய இனங்கள் சிறு எண்ணிக்கையிலும் காணப்படுகின்றன.
இலங்கையில், அநேகமாக எல்லா பிரதேசங்களிலும் கால்நடைகள் பரந்து காணப்படுகின்றன. கலாசாரம் சந்தை முறை மற்றும் விவசாய காலநிலை காரணங்களால் குறிப்பிட்ட பகுதிகளில் விசேட பண்ணை முறைகள் காணப்படுகின்றன. பாற்பண்ணைத் துறையில் ஈடுபடுவதற்கு தனியார் துறைக்கும் பல்வேறு ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. 2. பாற்பண்ணைத் துறை அனைத்து கால்நடை உபதுறைகளிலும் பாற்பண்ணைத் துறை முக்கியமான ஒரு துறையாகும். இது கிராமிய பொருளாதாரத்தில் அதி்களவு செல்வாக்கு செலுத்துகின்றமையே இதற்குக் காரணமாகும். இலங்கை ஏறக்குறைய 65,000 மெட்ரிக் தொன் பால் உற்பத்திப் பொருட்களை விசேடமாக FCMP போன்றவற்றை இறக்குமதி செய்கிறது. மிகப் பாரியளவிலான இறக்குமதி தொகையை பதிலீடு செய்வதற்கும், கிராமிய தொழில் வாய்ப்பை உருவாக்குவதற்கும், பாற்பண்ணைத் துறை அபிவிருத்தி பிரதான கருவியாக பயன்படுத்தப்படுகி்ன்றது. பல்வேறு மத, சமூக, கலாசார காரணிகளின் கட்டுப்பாடுகளின் நிலவும் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத்துறைகள் போலன்றி பாற்பண்ணைத் துறையானது அனைத்து இனங்களினாலும் மதப் பிரிவுகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு துறையாகும். உள்நாட்டு பாலுற்பத்தி, மொத்த பால் தேவையில் 17 வீதத்தை மட்டுமே நிவர்த்தி செய்கின்ற அதேவேளை மிகுதி இறக்குமதி செய்யப்படுகிறது. பாலுற்பத்தி பொருட்களின் மொத்த இறக்குமதி செலவு 15 மிலியன் ரூபா அல்லது ஏறக்குறைய 13 மிலியன் ஐ.அ.சடொ. ஆகும்.அரசு பாற்பண்ணைத் துறை மீது முக்கியம் கவனம் செலுத்துவதன் காரணம் இத்துறையை ஒரு உள்நாட்டு கைத்தொழில் ஆக விருத்தி செய்வதன் பொருட்டாகும். பாற்பண்ணை அபிவிருத்தி துறையில் அரசாங்கத்தின் பிரதான கொள்கையாக விளங்குவது, 2015 ஆம் ஆண்டளவில் நாட்டின் பால் தேவையி்ல் 50% ஐ பூர்த்தி செய்வதாகும். இதனால் பொதுத்துறை முதலீட்டு நிகழ்ச்சித் திட்டத்தில் பாற்பண்ணை அபிவிருத்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் அதேவேளை பாற்பண்ணை துறையில் ஈடுபடுவதற்கு தனியார் துறைக்கும் பல்வேறு ஊக்குவிப்புகள் வழங்கப்படுகின்றன. பாற்பண்ணை துறையானது உள் வலயம் தவிர்ந்த ஏனைய விவசாய – காலநிலை வலயங்களில், 2 – 5 பசுக்களை வைத்திருக்கும் சிறு பண்ணையாளர்களிலும் ஊழியர்களினதும் அடிப்படையில் தங்கியுள்ளது. உலர் வலயத்தில் மிகக் குறைந்த பால் விளைச்சலை உடைய உள்நாட்டு இனப் பசுக்களை கொண்டு காணப்பட்டாலும், இப்பகுதிகளில் மந்தைகள் பெரியனவாக உள்ளன. நாட்டினுள் மதிப்பிடப்பட்டு வருடாந்த பால் உற்பத்தி 350 மிலியன் லீட்டராக காணப்படும் அதேவேளை இது அநேகமாக எல்லா மாவட்டஙகளில் உற்பத்தி செய்யப்படுகிறது. கணிசமான பாலுற்பத்தியைக் கொண்ட மாவட்டஙகளான குருணாகல், பதுளை, அநுராதபுரம் மற்றும் நுவரெலியா ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கிடைக்கப் பெறும் மொத்த பாலில் வருடாந்தம் 100 மிலியன் லீட்டர் அளவே உள்நாட்டு பாற் சந்தைக்கு வருகிறது. ஏனையவை வேறு வழிகளிலும் வீட்டு நுகர்விற்கும் உட்படுத்தப்படுகிறது. புற் தரைகளுக்கான நிலப் பற்றாக்குறை நிலவுவதனால் பிரதான பால் உற்பத்தி பிரதேசங்கள் இடைநிலை மற்றும் உயர்நிலைப் பகுதிகளில் இருந்து வடமேற்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு அண்மையில் மாற்றப்பட்டன. 2006 இல் பதிவு செய்யப்பட்ட ஆகக்கூடிய பாற் சேகரிப்பு வடமேல் மாகாணத்தில் காணப்பட்ட அதேவேளை இவ் ஆண்டில் சேகரிக்கப்பட்ட மொத்த பாலில் இது 18.9% ஆக அமைந்தது. மரபு ரீதியான பால் கிடைக்கப் பெறும் மூலங்களில் மலைநாடு மற்றும் இடைநிலை ஆகியவற்றில் சேகரிக்கப்பட்ட பாலின் அளவு முறையே 7.1% மும் 15.7% மும் ஆகும். 3. கோழி வளர்ப்பு வீட்டு வளவுகளில் நடைபெறும் ஒரு கைத்தொழில் துறையாக இலங்கை கோழி வளர்ப்புத் தொழில் அண்மைய மூன்று சகாப்தங்களாக ஒரு வர்த்தக கைத்தொழிலாக வளர்ச்சியடைந்துள்ளது. 1950 களில் இலங்கை அரசாங்கமானது நாட்டிற்குள் உள்நாட்டு கோழிகளின் சனத்தொகையை மேம்படுத்துவதற்கு நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பித்தது.
அக்கால கட்டத்திலிருந்து இத்துறையானது தனியார் துறையின் அயராத ஈடுபாடு காரணமாக விசேடமாக புரொய்லர் பிரிவில் அதிக வளர்ச்சியுள்ளது. இன்று இக்கைத்தொழிலானது தனியார் துறையின் வசம் காணப்படும் அதேவேளை அரசாங்கத்தின் பங்கு கைத்தொழிலின் வலுவாக்கலுக்காக கோழி வளர்ப்புத் துறை சுகாதார சேவைகள் பராமரிப்பு நிகழ்ச்சித் திட்டங்கள், ஆராய்ச்சி மற்றும் கொள்கை அபிவிருத்தி திட்டங்கள் ஆகியவற்றின் அமுலாக்கலை மேற்கொள்வது ஆகும்.
இலங்கையின் கால்நடை உபதுறையில் 70% பங்களிப்பு கோழி இறைச்சி மற்றும் முட்டையின் மூலம் ஈடு செய்யப்படுகிறது. நுகர்வாளர்களின் தற்போதைய கொள்வனவு மட்டங்களுக்கேற்ப கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் உள்நாட்டு மொத்த தேவையை நிவர்த்தி செய்யக் கூடிய கொள்திறனை இக்கைத்தொழில் கொண்டுள்ளது. ஏனைய விலங்கு உற்பத்திகளுடன் ஒப்பிடுமிடத்து கோழி இறைச்சியும் முட்டையும் மலிவாக கிடைக்கப் பெறுவதால் இன்று இலங்கையின் சராசரி உணவு வேளையில், அதிகளவில் நுகர்வு செய்யப்படும் விலங்குப் புரதமாக கோழி இறைச்சியும் முட்டையும் காணப்படுகின்றன. கோழி இறைச்சியும் முட்டையும் நாடெங்கிலும் கிடைக்கப் பெறும் அதேவேளை இவை பிரதான நகரங்களில் காணப்படும் விசேட அல்லாடிகளிலிருந்து சாதாரண சில்லறைக்கடை வரை அனைத்து மட்டஙகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போதைய கோழி இறைச்சி முட்டை ஆகியவற்றின் கிடைப்பனவு முறையே 4.8 கிலோ கிராம் ஆகவும் 57 முட்டைகள் ஆகவும் காணப்படுகின்றன.
புரொய்லர் கைத்தொழிலானது அநேகமாக ஒன்றிணைக்கப்பட்டதுடன், ஒப்பந்த கோழி வளர்ப்பாளர் முறைமையினூடாக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. வர்த்தக குறியிடப்பட்ட கோழி 15 பெரிய மற்றும் நடுத்தர புரொய்லர் பதனிடல் நிறுவனங்களின் ஊடாக சந்தைப்படுத்தப்படுகின்றன. பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளின் கைத்தொழிலானது ஏற்றுமதி இயலளவுடன் கூடிய ஒரு இலாபகரமான துறையாக மாறியுள்ளது. 04 நான்கு புரொய்லர் பதனிடல் நிறுவனங்களும், 05 ஐந்து ஏனைய பதனிடல் கம்பனிகளும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட HACCP முறைமையின் சான்றிதழைப் பெற்றுள்ளன. இரண்டு 02 உள்நாட்டு பேரம் பெற்றார் பண்ணைகள் நாட்டின் பெற்றார் பறவைத் தேவையில் 70% ஐ வழங்குகின்றன. உள்நாட்டு தீவன உற்பத்தியாளர்களால் தரமான கோழித் தீவனங்கள் உற்பத்தி செய்யப்படும் அதேசமயம் இவை தவிர இரண்டு 02 பல் தேசியக் கம்பனிகளும் கோழித் தீவன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இருப்பினும், கோழித் தீவன உற்பத்திக்கு தேவையான உள்ளீடுகளில் 70% இறக்குமதி செய்யப்படுகின்றன. மூலப் பொருட்களின் விலை உலக சந்தையில் அதிகரித்து வருவதாலும் உயிரியல் எரிபொருளுக்கான சோளத்தைப் பயன்படுத்தும் திட்டத்தினால் உலக சந்தையில் ஏற்படும் தட்டுப்பாட்டிற்கு முகங் கொடுக்கும் நோக்கிலும் கால்நடை அபிவிருத்தி அமைச்சானது விவசாய அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வஙகியுடன் இணைந்து இலங்கையில் சோள வேளாண்மையை விருத்தி செய்வதற்கும் விரிவாக்கல் செய்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
சோள விவசாயிகளுக்கு சிறந்த உற்பத்தி விலையைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், 2005 ஏப்ரலில் அரசாங்கம் இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு 70% வரியை நிர்ணயித்தது. தனியார் துறையானது ஒப்பந்த விவசாயிகளின் உதவியுடன் சோள வேளாண்மையை மேற்கொள்வதில் அதிக அக்கறை செலுத்தி வரும் அதேவேளை இது கோழி வளர்ப்புத் துறையில் ஒரு சாதகமான விளைவை விரைவில் ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 4. ஆடு வளர்ப்புத் துறை ஆடு உற்பத்தியானது விசேடமாக உலர்வலயப் பகுதிகளில் வலங்குப் பண்ணையாளர்களிடையே கால்நடை விவசாயத்தில் ஒரு மரபு ரீதியான துறையாக விளங்குகிறது. ஆடுகளின் சனத்தொகையில் 70% ஆனவை இலங்கையின் உலர்வலயப் பகுதிகளிலும் இடைவலயப் பகுதிகளிலும் காணப்படுவதுடன் அநேகமாக இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் பரந்து காணப்படுகின்ற ஒரு கைத்தொழிலாக இது விளங்குகிறது.
எவ்வாறாயினும் பல்வேறு உற்பத்தி முறைமைகள் காணப்பட்டபோதும் ஆடு வளர்ப்புப் பண்ணை முறைமையானது விவசாய காலநிலை வலயங்கள் மேய்ப்பு நில கிடைப்பனவு உற்பத்தி முறை சமூகத்தின் சமூக கலாசார பாங்குகள் ஆகியவற்றின் பிரகாரம் இடத்துக்கிடம் வேறுபடுகிறது. விசாலமான நிலப்பரப்பில் வளர்க்கும் முறை அநேகமாக உலர்வலயத்திலும், இடைநிலவலயத்திலும் காணப்படும். அதே சமயம் நடுத்தர உள்ளக வேளாண்மை முறை தென்னை முக்கோணத்தில் பிரதானமாகிக் காணப்படுகிறது. உள்ளக வளர்ப்பு முறை நகர மற்றும் உப நகர பகுதிகளிலும், மலைநாடு இடைநிலை மற்றும் யாழ்ப்பாணத் தீபகற்பம் ஆகிய பகுதிகளிலும் காணப்படுகின்றது.
விசாலமான நிலப்பரப்பில் வளர்க்கும் முறை நடுத்தர உள்ளக வளர்ப்பு முறை ஆகியவற்றினூடாக வளர்க்கப்படும் விலங்குகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. எவ்வாறையினும் கடந்த தசாப்த காலத்தில் நாட்டினுள் ஆடுகளின் மொத்த சனத்தொகையில் குறிப்பிடக்கூடிய வளர்ச்சி தென்படவில்லை. 5. பன்றி வளர்ப்பு பன்றி வளர்ப்பு மேல் மற்றும் வடமேல் மாகாணங்களி்ன் கரையோரப் பகுதிகளில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றது. இத்துறையில் விசாலமான நடுத்தர உள்ளக, உள்ளக வளர்ப்பு போன்ற முறைமைகள் காணப்படுகின்றன. நிகழ்கால பன்றி சனத்தொகையில் ஏறக்குறைய 80,000 ஆகவும், வருடாந்த பன்றியிறைச்சி உற்பத்தி 9,500 மெ.தொ. ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பன்றியிறைச்சி 1% ஐ செலுத்துகிறது. ஆடு வளர்ப்புத் துறையை போன்றே பன்றி வளர்ப்புத் துறையும் கடந்த சில தசாப்பங்களாக குறிப்பிடக்கூடிய வளர்ச்சி எய்தவில்லை. பன்றியிறைச்சி மற்றும் அதன் உப உற்பத்தி பொருட்களுக்கான கணிசமான கேள்வி காணப்பட்ட போதிலும் சந்தை விருத்தி பற்றாக்குறை மற்றும் பல்லினத்தன்மை காரணமாக இக் கைத்தொழில் விரிவாக்கப்பட முடியாதுள்ளது. இது தவிர சூழலியல் பிரச்சினைகளும், நகர மற்றும் உப நகர பகுதிகளில் பன்றி வளர்ப்பிற்காக பாரிய அச்சுறுத்தலாக காணப்படுகின்றன. 6. நிறுவன உதவிகள் ஆராய்ச்சி, விரிவாக்கல், கால்நடை சுகாதார முகாமைத்துவம் மற்றும் கால்நடைத் துறைக்கான செயற்கை முறை இனவிருத்தி உள்ளீடுகள் போன்ற இனவிருத்தி சேவைகள் ஆகியன உட்பட கால்நடை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான தொழிநுட்ப வழிகாட்டல் வழங்கும் பிரதான நிறுவனமாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் விளங்குகிறது. இது கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழுள்ள தலைமை அரச நிறுவனமாகும். எவ்வாறாயினும், இலங்கையின் அரசியலமைப்பின் படி கால்நடை அபிவிருத்தி துறையானது உரிமை மாற்றம் செய்யப்படும் ஒரு துறையாக விளங்குவதால் கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் ஒன்பது மாகாண கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களங்களால் அனைத்து மாகாணங்களிலும் உள்ள அவற்றினது 257 கால்நடை மருத்துவ நிலையங்களின் உதவியுடன் அமுல்படுத்தப்படுகிறது. கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ்வரும் தேசிய கால்நடை அபிவிருத்தி சபை ஒரு நியதிச் சபையாகவும் அரச பண்ணைகளுக்குப் பொறுப்பான பிரதான அமைப்பாகவும் விளங்குகிறது. இச்சபை பிரதானமாக கால்நடை இனங்களுக்கான கருக்கட்டல்களின் பராமரிப்பு மற்றும் கால்நடை வளர்ப்பில் அக்கறையுடையோருக்கு விருத்தி செய்யப்பட்ட ஆண் மற்றும் பெண் விலங்குகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்குப் பொறுப்பாக உள்ளது. அத்துடன் நாட்டில் தூய பால் நுகர்வினை மேம்படுத்தும் நோக்கில் பால் நுகர்வினை பிரபல்யப்படுத்துவதற்கு முக்கிய இடங்களில் பால் விற்பனை நிலையங்களை தயாரிக்கும் நடவடிக்கையிலும் இச்சபை ஈடுபட்டுள்ளது. வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் நிறுவனமானது கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ்வரும் ஒரு முழு அரசுடைமை நிறுவனமாகும். இந் நிறுவனம் பால் சேகரிப்பு மற்றும் பதனிடப்பட்ட பாற்பொருள் உற்பத்திகளை பதப்படுத்தலும் சந்தைப்படுத்தலும் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை உள்ளூர் பாற்சந்தையில் சேதரிக்கப்படும் மொத்த பாலில் 54% பங்களிப்பினை மில்கோ நிறுவனம் வழங்குகிறது.
பாற் சேகரிப்பு இந்நிறுவனத்தினால் தாபிக்கப்பட்டுள்ள நாடெங்கிலும் பரந்துள்ள ஏறக்குறைய 2000 விவசாயிகளின் முகாமைத்துவ சங்கங்களினால் (FMS) மேற்கொள்ளப்படுகிறது.
கால்நடைத்துறை செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள தனியார் துறை நிறுவனங்களில் நெஸ்லே லங்கா லிமிடெட் பிரதானமானதாகும். இது நெஸ்லேயின் துணை நிறுவனமாகும். பால் பதனிடல் துறையில், மில்கோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பிரதான நிறுவனமாக விளங்கும் நெஸ்லே நிறுவனம். முழு ஆடைப்பால்மா உட்பட பல்வேறு பாற்பொருட்களின் உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. பால் பதனிடல் கைத்தொழிலில் ஈடுபட்ட பாரிய ஏனைய நிறுவனங்கள் கொத்மலே டெய்ரி புரொடக்ட்ஸ், லக்கி லங்கா டெய்ரீல் லிமிடெட், லங்கா மில்க் பூட்ஸ் பிறைவெட் லிமிடெட் பொன்டெரா பிரான்ட்ஸ் பிறைவெட் லிமிடெட் ஆகியனவாகும். இவை மட்டுமன்றி பால் சேகரிப்பு மற்றும் பால் பதனிடல் தொழிலில் பல்வேறு சிறு மற்றும் நடுத்தர அளவிலான அமைப்புகளும் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.
பாலுற்பத்தியில் ஈடுபட்டுள்ள தனியார் துறை பாரிய நிறுவனங்கள் காணப்படவில்லை. இத்துறையில் ஈடுபட்டுள்ள ஒரேயோரு தனியார் துறை நிறுவனமாக லங்கா டெய்ரீஸ் விமிடெட் விளங்குவதுடன், இந் நிறுவனம் மலைநாட்டில் இரு பாரிய பண்ணைகளையும் நடாத்தி வருகிறது. பாற் பண்ணைத் துறையை முன்னேற்றுவதற்கு பொதுத்துறை முயற்சிகளுக்கு அனுசரணை வழங்கும் பொருட்டு தனியார் துறையின் ஈடுபாட்டை மேம்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும் தனியார் துறையானது கோழித் தீவன உற்பத்தி, கோழி இனவிருத்திப் பண்ணைகளும், பொரிக்க வைத்தல் முகாமைத்துவம், பாரியளவிலான வர்த்தக கோழி உற்பத்தி மற்றும் கோழி பதனிடல் ஆகிய கைத்தொழில்களிலேயே ஆகக் கூடுதல் அளவில் ஈடுபட்டுள்ளன. கோழி வளர்ப்புத் துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கையில் இரு பிரதான பல்தேசியக் கம்பனிகள் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இதே போன்று தனியார் கூட்டிணைப்புத் துறையின் பங்களிப்பானது மிருக வைத்திய மருத்துவ வகைகள் மற்ரு் தடுப்பூசிகளின் வழங்கல், விசேடமாக கோழி வளர்ப்புக் கைத்தொழிலுக்குத் தேவையான யந்திராதிகள் உபகரணங்கள் ஆகியவற்றின் வழங்கல் போன்றவற்றிலும் காணப்படுகின்றன. இலங்கையின் கால்நடைத்துறை பற்றிய தெரிவு செய்யப்பட்ட புள்ளி விபரங்களைப் பெற்றுக் கொள்ள கோழிப் பண்ணைத் துறையின் செயலாற்றுகை கால்நடை உற்பத்தியும் எண்ணிக்கை பாலுற்பத்தியும் லீற்றர்களில் 2006
|