|
கால்நடை அபிவிருத்தி அமைச்சின் கீழ் காணப்படும் முகவர் நிலையங்கள் அமைச்சின் கீழ் முகவர் நிலையங்கள் செயற்படும் அதேவேளை அவை நாட்டில் கால்நடை அபிவிருத்தியுடன் தொடர்புடைய பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. 01.கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களமானது கால்நடை அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு தேவையான விலங்கு சுகாதாரத்திற்காக தொழில்நுட்ப உதவிகள், கால்நடை இனப்பெருக்கம், கால்நடை ஆராய்ச்சி மற்றும் மனித வள அபிவிருத்தி ஆகியவற்றிற்கு தலைமைத்துவம் வழங்கும் உயர்ந்த பட்ச அரச நிறுவனமாகும். இதன் செயற்பணி யாதெனில் நிலைதகு கொள்கையை சிபார்சு செய்தல், நிகழ்ச்சித்திட்டங்களை வகுக்கல் போன்றவற்றின் ஊடாக கால்நடைத் துறையின் நிலைதகு அபிவிருத்திக்கு வழிகாட்டலும், தலைமைத்துவமும் வழங்குதல் மட்டுமன்றி விலங்கு தீவனங்களின் தரம், தேவைப்படும் அளவு ஆகியவற்றை உறுதிப்படுத்தவும் ஏற்றுமதி சந்தையில் கேள்விக்கேற்ப வழங்கலை மேற்கொள்ளவும் தேவையான நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்த உதவும் தொழில்நுட்ப உள்ளீடுகளை வழங்குதல்.
02. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை
தேசிய கால்நடை அபிவிருத்தி சபையானது 1972 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க அரச விவசாய கூட்டுத்தாபன சட்டத்தின் கீழ் 1973 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டது. இது கால்நடை பராமரிப்புக்காகவும் தென்னை செய்கைக்காகவும் 14,000 ஹெ. மொத்த பரப்பாகக் கொண்ட 30 கால்நடை மற்றும் ருங்கிணைக்கப்பட்ட பண்ணைகளையும் 01 பயிற்சி நிலையத்தையும் நடாத்தி வருகிறது.
இதன் செயற்பணி யாதெனில், பல்வேறு விவசாய சூழலியல் வலயங்களில் சுய நிறைவு கால்நடை மற்றும் ருங்கிணைக்கப்பட்ட பண்ணைகளை திருப்திகரமான தொழில்படையின் உதவியுடன் நடாத்துதல்.
.நாடு, கால்நடை மற்றும் பாற்பண்ணை உற்பத்தியில் தன்னிறைவு காணும் பொருட்டு பண்ணைகளுக்கு இனப்பெருக்க விலங்குகளை தொடர்ச்சியாக வழங்குவதற்கு உரிய செயற்பாடுகளை அபிவிருத்தி செய்தல்.
.நிறுவனத்தின் வெளியீட்டையும் இலாபத்தையும் அதிகரிக்கச் செய்வதற்கு தனியார் துறை பங்களிப்புடனும் புதிய தொழில் நுட்பத்துடனும் கால்நடை மற்றும் விவசாய உற்பத்திகளை விருத்தி செய்தல்.
.நாட்டின் பனைப் பயிர் உற்பத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கு உதவும் வகையில் தெரிவு செய்யப்பட்ட பண்ணைகளில் பனைப் பயிர் வேளாண்மையை மேற்கொள்ளல்
.கால்நடை மற்றும் விவசாயத் துறையில் அதிகூடிய உற்பத்தித்திறன் மட்டத்தை அடைதல்.
.கால்நடை மற்றும் பயிர் ருங்கிணைக்கப்பட்ட பண்ணை முறையின் ஊடாக அதிகபட்ச உற்பத்தித்திறனை அடைதல் மற்றும் சூழல் பாதுகாப்பு விவசாய நடைமுறைகளை பின்பற்றுதல்.
மேலதிக விபரங்களுக்கு : www.nldb.gov.lk 03. வரையறுக்கப்பட்ட மில்கோ தனியார் நிறுவனம்  2000 இல் தாபிக்கப்பட்ட மில்கோ நிறுவனம், தேசிய பாற்சபைக்குப் பின்னர் அமைக்கப்பட்ட நாட்டின் பிரதான பால் பதப்படுத்தல் நிறுவனமாகும். இந்நிறுவனம் நாடு பூராவும் பால் சேகரிப்பு நிலையங்களின் வலையமைப்பைக் கொண்டுள்ள அதேவேளை அம்பேவெல, திகன மற்றும் நாரஹேன்பிட்ட ஆகிய இடங்களில் 03 பால் பதப்படுத்தல் தொழிற்சாலைகளையும் கொண்டுள்ளது. இதன் செயற்பணி யாதெனில், உள்ளூர் பாற்பண்ணை விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதற்கும் பால் உற்பத்தியை பெருக்குவதற்கும், நுகர்வோரின் திருப்தியை உறுதிப்படுத்தவும் பயனுள்ள செயற்திறன்மிக்க முகாமைத்துவத்தின் ஊடாக போட்டித் தன்மையின் விலையில் தூய பால் மற்றும் பால் உற்பத்தி பொருட்களை வழங்குதல் மற்றும் நிறுவனத்தின் மனிதவள அபிவிருத்தியை ஊக்குவிக்கும் அதேவேளை சிறு விவசாயிகள் நலனில் நிலைதகு அபிவிருத்தியை அடைதல்
மேலதிக விபரங்களுக்கு www.milco.lk 04.வரையறுக்கப்பட்ட இலங்கை லிபியா விவசாய கால்நடை அபிவிருத்தி கம்பனி இலங்கை விவசாய மற்றும் கால்நடை செயற்திட்டங்களை கொண்டு நடாத்தவும், இத்துறைகளுக்கு தேவையான அனைத்து உள்ளீடுகளையும் இயந்திராதிகளையும் இறக்குமதி செய்யவும் விவசாய உற்பத்திகளை ஏற்றுமதி செய்யவும், அனைத்து வகையான விவசாய உற்பத்திகளையும் கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல், இறக்குமதி செய்தல், ஏற்றுமதி செய்தல் மற்றும் கோழிப்பண்ணை, இறைச்சி மற்றும் முட்டை உள்ளடங்கிய கால்நடை செயற்திட்டங்களுடன் உள்ளடங்கிய அனைத்து விடயங்களையும் கையாளுதல், உற்பத்திகளை கொள்வனவு செய்தல், விற்பனை செய்தல், இறக்குமதி செய்தல் இத்யாதி காரணங்களுக்காக 1981 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட கூட்டு முயற்சி கம்பனியாகும். இதில் 51% பங்குகளை தேசிய கால்நடை அபிவிருத்தி சபையும் 49 % பங்குகளை லிபியா அராபிய ஜமாஹிரியா நிறுவனமும் கொண்டுள்ளது
இக் கம்பனி, மாடு, செம்மறி மற்றும் கோழி ஆகியன ஒருங்கிணைக்கப்பட்ட 350 ஏக்கர் பரப்பளவுள்ள தென்னை தோட்டத்தை லுணுவில, பண்டிருப்புவ எனும் இடத்தில் நடாத்தி வருகிறது. அத்துடன் இது கோழி இனப்பெருக்க பண்ணை ஒன்றையும் குஞ்சு பொரித்தல் பண்ணை ஒன்றையும் நடாத்துகின்றது.
அடுத்த
|