|

கௌரவ அமைச்சரின் செய்தி இலங்கை பண்டைய காலந்தொட்டு விவசாய தேவைகளுக்காக விலங்குகளை வளர்க்கும் மரபைக் கொண்டிருந்தது. கிழக்கின் தானிய களஞ்சியம் என வருணிக்கப்பட்ட பண்டைய இலங்கை தனித்துவமான நீர்ப்பாசன வலையமைப்புடனும், விவசாய செயற்பாடுகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் உதவிக் கொள்ளும் பங்கேற்பு முறையையும் கொண்ட குறிப்பிடத்தக்க விவசாய உற்பத்தி முறைமையை கொண்டிருந்தது. பசுக்களும், எருதுகளும் பண்ணைகளுக்கு உறுதுணையாக இருந்தன. அத்துடன் அவை, விவசாய நிலங்களுக்கு தேவையாக உரத்தை வழங்கும் பிரதான மூலமாகவும் கருதப்பட்டன. பசுக்களிலிருந்து பெறப்பட்ட பால் உள்நாட்டு மக்களின் உணவு வேளைகளில் பிரதான இடத்தை வகித்ததுடன், பஸ்கோரச எனும் ஐஞ்சுவைகளின் வடிவிலும் பெறுமதி சேர்க்கப்பட்டு நுகரப்பட்டது. நாடு, பாலிலும் தானியத்திலும் தன்னிறைவுற்றிருந்தது. காலனித்துவ ஆட்சியின் கீழ் உள்நாட்டு உணவு உற்பத்தியை விட பெருந்தோட்ட விவசாயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. பால் உற்பத்தி பாதிக்கப்பட்டதுடன் எமது தேவைகளுக்காக இறக்குமதி செய்யப்பட்ட பால் உற்பத்தி பொருட்களில் தங்கியிருக்கும் நிலை தோன்றியது. காலப்போக்கில் மேற்கிலிருந்து எமது சந்தைகளுக்கு கடன் அடிப்படையில் தருவிக்கப்படும் பாலுணவுப் பொருட்களின் தீங்கான விளைவுகளாலும் பாதிக்கப்படலானோம். 1970 இல்,80:20ஆக காணப்பட்ட பாலின் தன்னிறைவு வீதாசாரம், 2006 ஆகையில் 17 : 83 ஆக குறைந்தது. இவ்வீழ்ச்சி நாட்டின் வர்த்தக மீதியில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளமை மறுப்பதற்கில்லை.
ஆதலால், அரசாங்கமானது நாட்டில் பாற் பண்ணைத்துறை அபிவிருத்திக்கு முன்னுரிமை இடம் வழங்கியுள்ளது. கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம், தேசிய கால்நடை அபிவிருத்தி சபை மற்றும் வரையறுக்கப்பட்ட மில்கோ -தனி- நிறுவனம் ஆகியவற்றால் பல்வேறு பொதுத்துறை முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பொதுத்துறை முயற்சிகளை பூரணப்படுத்துவதற்கு தனியார் துறையின் ஈடுபாடு அத்தியாவசியமாகும்.
அரசாங்கத்தின் இ-முன்னெடுப்புகளுக்கு சமாந்தரமாக அமைச்சானது கால்நடைத்துறைக்காக கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ட்ராநெட் ஒன்றினை தாபிப்பதற்கு அனுசரணை வழங்கியுள்ளது. அத்துடன், நோய் கண்காணிப்பு மற்றும் செயற்கை இனப்பெருக்க தகவல்களை பதிவு செய்தல் போன்றவற்றிற்கான இணையத்தள நிரல்களையும் விருத்தி செய்து வருகின்றோம்.
அமைச்சின் இணையத்தளமானது நாம் ஏற்கனவே மேற்கொண்டுள்ள இ-முன்னெடுப்புகளுக்கு மேலும் பெறுமதி சேர்க்கும் என நம்புகிறேன்.
- ஆர்.எம்.சீ.பீ. ரத்நாயக்க பா.உ.
- கால்நடை அபிவிருத்தி அமைச்சர்
|