முகப்பு

 

 Image

 

கால்நடை அபிவிருத்தி அமைச்சானது கால்நடைத் துறையின் முகாமைத்துவம் அபிவிருத்தி ஆகியவற்றிற்கான கொள்கைகள், திட்டங்கள், நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் அத்துறைக்குரிய நியதிச் சட்ட முறைத் தேவைப்பாடுகள் போன்றவற்றின் அமுலாக்கத்திற்கு பொறுப்பான உச்ச நிறுவனமாகும்              

நாட்டில் கால்நடை உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி கால்நடைத் துறையின் வளர்ச்சியையும், உற்பத்தி திறனையும் அதிகரிக்கச் செய்வதே முக்கிய அபிவிருத்தி இலக்கு ஆகும்                 

கிராமிய வேலை வாய்ப்பு உருவாக்கம், கிராமிய சமூகங்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் கால்நடை உற்பத்தி செயற்பாடுகளின் ஊடாக பலவீனமான தொகுதியினரிடையே வறுமை குறைப்பு மற்றும் போஷாக்கு விருத்தி போன்றவை கால்நடை அபிவிருத்தியின் ஏனைய நோக்கங்களாகும்                 

பாற்பண்ணை உப துறையை அபிவிருத்தி செய்தல்  அமைச்சின் இடைக்கால அபிவிருத்தி திட்டத்தின்   முன்னுரிமை செயற்பாடாகும்